-PPAF-
26 வருடகாலமாக புத்தள மாவட்டம் இழந்து தவிக்கும் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காக எமது அமைப்பு பல்வேறு முயற்சிகளையும் , தியாகங்களையும் அண்மைக்காலமாக செய்து வருகின்றது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது அமைப்பு 03ஆம் சக்தியாக அனைவரையும் உள்வாங்கி தேர்தலில் போட்டியிடும் என அண்மையில் நடந்த ஊடகவியளாளர் மாநாட்டில் நாம் கூறியதற்கமைய எமது அமைப்பின் முயற்சியால் பல அரசியல் வாதிகள் எம்முடன் இனைந்துள்ளனர்.
இதன் முதல் அம்சமாக
எமது அமைப்பின் சார்பாக புத்தளம் நகரிலிருந்து தலைமைத்துவ சபையால் தெரிவு செய்யப்பட்ட ஒய்வு பெற்ற மாவட்ட பொறியியளாளர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அடுத்து கல்பிட்டி தலைமைத்துவச்சபையால் தெரிவு செய்யப்பட்ட கல்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் சகோதரர் இன்பாஸ் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அடுத்து அக்கறைப்பற்று பகுதியிலிருந்து தலைமைத்துவச்சபையால் தெரிவுசெய்யப்பட்ட சகோதரர் இப்திகார் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அடுத்து யாழ் முஸ்லிம்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் உவைஸ் வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
அடுத்து எம்முடன் இனைந்து கொண்ட முன்னால் மாகாணசபை உருப்பினர் சகோதரர் எஹியா வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.






0 Comments