-Irshard Rahmathullah-
வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி மூலமும்,உரிமை மூலமும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என மன்னார் தமிழ் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர் நந்தன் கூறினார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகக் கட்டிடத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அன்று யுத்த காலத்தில் தமிழ் மக்கள் இடம் பெயர்வுக்குள்ளான போது அம்மகை்களுக்கு தேவைாயன அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை தமிழினம் ஒரு போதும் மறந்துவிட முடியாது,தமிழ் தேசியம் பேசியவர்கள் எமது மக்கள் துன்பங்களையும்,இழப்புக்களையும் சந்தித்த போது எங்கே போய் அமர்ந்திருந்தார்கள்.பாராளுமன் றப் பிரதி நிதித்துவத்தையும்,சுகபோக வாழ்க்கையினையும்,அவர்களது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு கற்றல் செயற்பாடுகளுக்காக அனுப்பியதையே செய்தார்கள்.
இன்று எமது வன்னி தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்துள்ள அபிவிருத்திகள் மற்றும் வாழ்வாதார வசதிகளை இவர்கள் செய்யாமல் இருந்தமைக்கான காரணம் என்னவென்று கேட்கவிரும்புகின்றேன்.
துரதிஷ்டம் தமிழ் மக்கள் இந்த அரசியல்வாதிகளை நம்பி நம்பி அவர்களது மயக்கமான பேச்சுக்களில் ஏமாந்து ஒவ்வொரு தேர்தலிலும் அளித்த வாக்குகள் விழலுக்கு இறைத்த நீரானதே தவிர,எவ்வித பிரயோசனத்தையும கண்டதில்லை.
இந்த நிலையில் வடமாகாண சபையின் அதிகாரத்தை கொண்டவர்கள் வன்னி மாவட்ட மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவை எதவும் இல்லை,மாறாக தமிழ் மக்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்துவருகின்ற பணியினை தடுக்கும் வேளையினையே செய்கின்றார்கள்.
இன்று எத்தனை யுவதிகள் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் வன்னி மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்துவரும் திட்டங்கள் வரலாற்று பதிவாகும்,இதனை எநச்த சந்தர்ப்பத்திலும் எம்மால் மறக்க முடியாது என்றும் அமைப்பளார் நந்தன் இங்கு கூறினார்.


0 Comments