கடந்த
2 -5 ஆம்
திகதி இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் தேசிய தொழில்நுட்ப கண்காட்சியான INFOTEL
பண்டார நாயக்க
ஞாபாகார்த்த மண்டபத்தில்(BMCH) நடைபெற்றது.
இதில்
200 இட்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கு பற்றின. இக் கண்காட்சி தொலைத்தொடர்புகள் மற்றும்
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் Mr .Harin Fernando (M.P.) அவர்கள் உட்பட பல
அதிதிகளால் இணைந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில்
புத்தளத்தில் இருந்து முதல் தடவையாக SILVERAYS.TECH மற்றும்
Imara Software Solutions ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டு
புத்தளம், தொழிநுட்ப
துறையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை
புத்தளத்தின் தொழிநுட்ப துறையை பிரதிநிதித்துவப்பபடுத்தும் PICTA (
Puttalam Information and Communication Technology Association
) என்ற
அமைப்பு WUSC நிறுவனத்தின்
வழிகாட்டலுடன் இணைத்து முன்னெடுத்தது என்பது பாராட்டத்தக்க விடயமாகும்.
25 வருடமாக நடைபெற்று
வரும் இக் கண்காட்சியில் புத்தளத்தில் இருந்து நிறுவனங்கள் கலந்து கொள்வது இதுவே
முதல் தடவையாகும் என்பது குறிப்பிட தக்கதொன்றாகும்.
இக் கண்காட்சியில் SILVERAYS.TECH
நிறுவனம் தங்களால்
புத்தளத்தில் முதல் தடவையாக உருவாக்கப்பட்ட
IoT (Internet of Things) சாதனம்
ஒன்றை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தயும் தம் பக்கம் ஈர்த்து கொண்டது. மேலும்
இந்நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட முற்றிலும் இலவசமாக தம் பொருட்கள் மற்றும்
சேவைகளை விளம்பரப்படுத்தும் இணையதளமான adsfly.lk (www.adsfly.lk) மற்றும் இந்நிறுவனத்தினால் உயர்
தொழிநுட்பங்களை (HI-TECH) கொண்டு
உருவாக்கப்பட்ட Point of Sale System (POS), Field Cash Collection
Managemnt System (Mobile App), Inventory Managemnt System, Credit Managemnt
System போன்ற
பல மென்பொருட்களையும் காட்சி படுத்தினர்.
மற்றும்
புத்தளத்தில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட Imara Softwrae
Solutions நிறுவனத்தினால்
உருவாக்கப்பட்ட Point of Sale
System (POS) மற்றும்
பல மென்பொருட்கள் உட்பட Ebay,
Amazon போன்ற
இணைய வணிகத்தை இலகுவாக்கும் சேவையை
வழங்கும் விசேடமான மென்பொருட்களையும் காட்சிப்படுத்தினர். இலங்கையில் இவ்வகையான
சேவையை வழங்குவதில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகின்றது.
-Mohame Awshaf-
























0 Comments