-Ibrahim Nihrir-
புத்தளம் தொகுதி மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கு நய வஞ்சகமான முறையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதுருதீன் மூக்கை நுழைத்துள்ளாரா...
புத்தளத்தின் சகல தரப்பு அரசியல்வாதிகளும் ஓரணியில் இணைந்து தேர்தல் களம் காண வேண்டும் என்று நாங்கள் ஆசிரியர்கள்-உலமாக்கள் இணைந்து பெரிய பள்ளிக்கு விண்ணப்பம் கொடுத்தபோது, அங்கே பிரசன்னமாகி இருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ் நவவி அவர்கள் வீராவேசம் பொங்க முடிந்தால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் நின்று தேர்தலுக்கு முகம் கொடுப்பேன், இல்லையென்றால் அரசியலை விட்டு தூர ஒதுங்குவேன் என்று சபதமிட்டுவிட்டு, நேற்றிரவு அவரது வீடு தேடி வந்த ரிஷாத் பதுருதீனின் தேசிய பட்டியல் எம்.பி. என்னும் ஆசை வார்த்தைக்கு கட்டுப்பட்டு புத்தளத்தை காட்டிக் கொடுக்க முனைந்துவிட்டாரா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது...
நேற்றிரவு விடிய, விடிய நவவி அவர்களோடு ரிஷாத் பதுருதீன் உடனிருந்து புத்தளம் மக்கள் அரும்பாடு பட்டு கட்டிக் கொண்டிருக்கும் குருவிக் கூட்டுக்குள் விஷப் பாம்பு போல தேசிய பட்டியல் எம்.பி. என்னும் ஆசையை நுழைத்து அதை கலைக்க முற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது...
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக இது வரை இருந்து வந்த நவவி அவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டு அவர்களை இடை நடுவில் கைவிட்டு சென்று விடும் சூழ்நிலை தோன்றியுள்ளதா...
ரிஷாத் பதுருதீனுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் தேர்தல் சம்பந்தமான ஓர் இணக்கப்பாடு தோன்றியுள்ளது அனைவரும் அறிந்ததே...
பெரிய பள்ளி கூட்டத்தின்போது, என் சமுதாயத்துக்காக என் கட்சி, அதன் தலைவர் அனைத்தையும் விட்டு விட்டு பொது அணியில் இணைவேன் என்று சத்தியம் செய்த தொழிலதிபர் அலிசப்ரி இந்த நவவி-ரிஷாத் சந்திப்பின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது...
கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட இந்த கதை உண்மையா பொய்யா என்று இன்னும் சில மணித்தியாலங்களில் தெரிந்துவிடும்...


0 Comments