Subscribe Us

header ads

வெளிநாட்டுக் கழிவுகள் நமக்கு எதற்கு?



சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னனி வியாபார குழுமத்தின் தலைவர் ஒருவரின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் பின்னர் அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டது. தனக்கு இலங்கையின் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் கிடைத்தால் தனக்கு உள்ள வியாபார அறிவு மற்றும் அனுபவம் போன்றவற்றின் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என உறுதியளித்து இருந்தார். அவர் வேறு யாரும் அல்ல, இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னனி வியாபார நிறுவனங்களின் தலைவராக இருக்கும் உள்ளூர் வியாபார ஜாம்பாவான் தம்மிக்க பெரேரா.

கஷினோ சூதாட்ட வியாபாரத்தில் பெயர் போன இவரது கையில் நாட்டைக் கொடுத்தால் நாட்டைக் கூறு போட்டு விற்றாலும் விற்றுவிடுவார் என்று அப்போதே எச்சரிக்கை விடுத்தோம். அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் இலங்கையின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹேலீஸ் நிறுவனம். இந்த குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்று Hayleys Free Zone Ltd என்கின்ற நிறுவனம். 

இந்நிறுவனம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பாவித்து வீசப்பட்ட மெத்தைகள் மற்றும் ஸ்பன்ஜுகள் அடங்கிய நூற்றுக்கணக்கான கண்டைனர்களை இறக்குமதி செய்தது ஊடகங்களில் கசிந்துள்ளது. எங்கோ பாவித்து வீசப்பட்ட பொருட்கள் நமக்கு எதற்கு?

வருடாவரும் இரண்டு பில்லியன் டன் ப்லாஸ்டிக் கழிவுகள் உருவாவதாக உலக வங்கி அறிக்கை ஒன்று கூறுகின்றது. கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காடு பகுதியில் கொட்டுவது போல, உலகின் முன்னேறிய நாடுகளின் கழிவுப் பொருட்களை வீசுவதற்கு எங்காவது ஒரு இடம். குறிப்பாக ஏதாவது ஒரு மூன்றாம் உலக நாடுகள் தேவைப்படும். அதன் ஒரு அங்கமாக இந்த கழுவுப் பொருட்களின் இறக்குமதி காணப்படுகிறது.

தம்மிக்க பெரேரா போன்ற ஊழல் வியாபாரிகள், அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. தனது சொந்த வியாபார நோக்கத்திற்காக நாட்டை சுடுகாடாக வேண்டுமானாலும் மாற்றி விடுவார்கள்.

-Zahran Careem-

Post a Comment

0 Comments