இலங்கை வாக்கு வங்கியில் ஆகக்குறைந்தது... தலா 45 வீதம் தமக்குரியது என ஐக்கிய தேசியக் கட்சியும் - பொதுஜன பெரமுனவும் நம்புகின்றன. எஞ்சியிருக்கும் 10 வீதத்தில் ஒரு பகுதியே.. குறிப்பாக ஏழு லட்ச மொத்த வாக்குகளே ஜே.வி.பிக்குரியது என்றும் கம்மன்பில கணக்குச் சொல்கிறார்.
கடந்த தேர்தலில் பொது வேட்பாளர் பெற்றது மொத்த வாக்குகளின் 51 வீதம் (62 லட்சம்) எனும் அடிப்படையில் இம்முறை பெருந்தேசிய கட்சிகளின் தேவை ஏதோ ஓரு பககத்தில் இருந்து சாயப் போகும் 6 வீதமே.
ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி சரியக் கூடிய சாத்தியமில்லையாதலால் அவர்களுக்குத் தேவைப்படும் 5 - 6 வீதத்தை கூட்டணியமைத்தல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதும், பிற சக்திகள் தனித்துப் போட்டியிடுவதூடாக அரச அதிருப்தியாளர்களிடமிருந்து ஒரு பங்கைக் கைப்பற்றுவது பெரமுனவினதும் கணக்குகள்.
தாம் விரும்பிய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க முன்பதாக மக்கள் சிந்திக்க வேண்டிய அடிப்படை விசயம்.. ஜனாதிபதி யார்? என்பதூடாக அரச இயந்திரத்தில் உள்ள கோளாறுகளை திருத்த முடியாது. அப்படி முடியுமாக இருந்திருந்தால்.. 2015ல்... இலங்கையின் நவீன 'God fatheராக' வர வேண்டும் என்ற கனவோடு அரியாசனத்தில் அமர்ந்த மைத்ரியே செய்து முடித்திருப்பார்.
எனவே, பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலுக்கும் சேர்த்தே 'நிலைப்பாடு' அவசியப்படுகிறது!
0 Comments