மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 29 ஆம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஒக்டோபர் மாதம் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்துக்கு மேலதிகமாக இந்த இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைத்தும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென மைத்திரிபால சிறிசேன முன்வைத்த நூறு நாள் வேலைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments