முஸ்லிம்கள் என்ன பௌத்த விகாரையை இடித்துவிட்டு பள்ளிவாயல் கட்டினார்களா? சிங்களவர்களின் சொத்தை சூறையாடினார்களா? சிங்களவர்களின் சோற்றில் கை வைத்தார்களா? அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளே ஆகவே அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
உங்களின் காடயர் பண்புகளை அவர்களிடம் காட்டாதீர்கள். இலங்கை நாட்டை சிங்களவர்கள் மாத்திரம் உரிமை கொண்டாட முடியாது,ஏனெனில் இந்நாட்டில் வாழும் நாங்கள் அனைவரும் இலங்கையில் வந்து குடியேறியவர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
இந்த விடயத்தை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுபடுவோர் புரிந்துகொள்ள வேண்டும்.
என அண்மைக் காலமாக முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுர குமார திஸ்ஸா நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


0 Comments