முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைக்களுக்கான ஹிஜாப் ஆடையை நைக் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தவுள்ளது.
விளையாட்டு வீராங்கனைகளுக்கான இந்த ஹிஜாப் ஆடை, பாரம்பரிய இஸ்லாமிய நடைமுறையின்படி தலைமூடிய வடிவில் உருவாக்கப்பட்டதுடன் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சவுகரியமான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நைக் தரப்பில், "குறைந்த அளவிலான எடையுடன் இந்த ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் அடுத்த வருடம் சந்தைகளிலுள்ள அலமாரியில் அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹிஜாப் தொடர்பாக பல்வேறு முஸ்லிம் விளையாட்டு வீராங்கனைகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் நைக் நிறுவனம் கூறியுள்ளது.
0 Comments