நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க பதவியேற்ற பின்னர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில், தான் எவ்வித கோபமும் இல்லை எனவும், கடந்த காலங்களில் வேறு சில குழுக்களே தன்னை விமர்சித்ததாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது இருவரும் கட்டித்தழுவி முத்தமிட்டு தமது அன்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments