Subscribe Us

header ads

கழிப்பறைக்குச் செல்லும் பெண்களை ஒளிந்திருந்து பார்ந்த நபரொருவர் உயிரிழப்பு


கழிப்பறைக்குச் செல்லும் பெண்களை ஒளிந்திருந்து பார்ந்த நபரொருவர் இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு இனைஞனின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர் அம்பன்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட 19 வயதுடைய இளைஞன் கேகாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments