Subscribe Us

header ads

தாய் வீட்டில் SLMC யில் மீண்டும் இணைந்த K.A பாயிஸ்

நாம் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து நமது அரசியல் பயணத்தைத் தொடர முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 23 ம் திகதி கண்டியில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களைச் சந்தித்து நமது பிரேரணையான, சிதறிப்போயிருக்கின்ற முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் "கூட்டமைப்பு" சம்பந்தமாக கலந்துரையாட சென்றிருந்த போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் நாம் மீண்டும் இணைய வேண்டுமென்று தலைவர் அழைப்பு விடுத்தார்.
இது சம்பந்தமாக அன்று இரவு பெருந்தலைவர் அஷ்ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பிறந்த தினத்தில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை வைபவத்தில் நமது போராளிகளுடன் கலந்துரையாடி நாம் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதென்ற முடிவை எடுத்திருக்கின்றோம் என்பதை அறிவிப்பிதில் மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...
நாம் கடந்த அரசியல் ஓய்வு காலத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவிடம், எமக்கு எதிர்கால அரசியலில் சரியான பாதையை காட்டுவாயாக என்று இறைஞ்சிய துஆ கபூலாக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக நம்புகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த இறை வழிகாட்டலோடு நாம் முன்னெடுக்கவிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடனான நமது எதிர்கால அரசியல் பயணம் சிறப்பாக அமைய பிரார்த்தனைகளில் எம்மையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
KA Baiz - Facebook

Post a Comment

0 Comments