Subscribe Us

header ads

இந்த உலகில் உயரமான மலை எது என்று தெரியுமா ?



இந்த உலகில் உயரமான மலை எது என்று கேட்டால், அது நிச்சயமாக எவரெஸ்ட் மலை என்று தான் எல்லோருமே கூறுவார்கள். சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இதுவே நமது சூரிய குடும்பத்தில் உயரமான மலை எது என்று கேட்டால், அதற்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? பதில் தெரியவில்லை என்றால், கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்!

ஒலிம்பஸ் மோன்ஸ் (Olympus Mons) என்பது பிரபலமான செவ்வாய் கோளில் இருக்கும் மலைகளுள் ஒன்று. குறிப்பாக இது ஒரு எரிமலை ஆகும். இது அளவில் எவரெஸ்ட் சிகரத்தினை விடப் பெரியது. 21,900 மீட்டர் அளவுடைய இந்த எரிமலை சூரியக் குடும்பத்திலேயே மிகவும் உயரமான மலையாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால், அதன்பின்பு சூரியனைச் சுற்றிவரும் சிறுகோளில் ஒன்றான வெஸ்டாவில் (Vesta) இதைவிடஅப் பெரிய மலை கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெசில்வியா’ (Rheasilvia) என்றழைக்கப்படும் இந்த மலையின் உயரம் ஒலிம்பஸ் மோன்ஸ் மலையினை விட வெறும் 100 மீட்டர் தான் அதிகம்.

இந்த அளவீடுகள் அந்தளவிற்குத் துல்லியம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் தற்போதைய கணக்கின்படி ரெசில்வியா மிகவும் பெரிய மலையாகக் கருதப்பட்டு வருகிறது. வெஸ்டாவிற்குச் செலுத்தப்பட்ட விண்கலம் 2011 வரை செய்த ஆய்வில் இந்த மலையானது மிகப்பெரிய பள்ளத்திலிருந்து உயரமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளத்தின் விட்டம் மட்டும் 505 கிலோ மீட்டர் (314 மைல்) இருக்குமாம்.

நமது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைப்பதற்கே பல ஆண்டுகள் ஆன நிலையில், அதை விடப் பெரிய மலைகள் என்றால் எப்படி இருக்கும்? நினைக்கும் போதே வியப்பாக இல்லையா? இதைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!

அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,

உங்கள்
SciNirosh (Niroshan Thillainathan)

Post a Comment

0 Comments