Subscribe Us

header ads

Man of the Match ரணிலுக்கென்றால் வெற்றி யாருக்கு?

Untitled
-ஜெம்ஸித் அஸீஸ்-
ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசியலமைப்பும் ஆட்சியுமே நாட்டின் சீரழிவுக்கு வழிவகுத்தன என்ற போதிலும்,மைத்திரிபாலவை ஆதரிக்க முன்வந்து சிறப்பான எதிர்காலம் என்ற நோக்கில் எதிரணியின் அரசியல் வேலைத்திட்டத்திற்கும் இணக்கம் தெரிவித்ததன் மூலமாக ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு மகத்தான சேவை ஒன்றைச் செய்திருக்கிறார். 
எனவேஅவரை இவ்வருடத்தின் சிறந்த முக்கிய பிரமுகர் (Man of the Year)என்று பாராட்டுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
இலட்சக் கணக்கான இலங்கையர்களும் இதனை ஒத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று ஒரு கருத்தை முன்வைக்கிறார் எழுத்தாளர் பி. பேர்ட்டி ரணவீரகே. 
போட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்திருக்கும் தருணத்தில்,துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்  அணியின் நிதானமற்ற ஆட்டத்தையும் வேகமாக விக்கட்டுக்கள் வீழ்வதையும் எதிரணியின் களத் தடுப்பு உஷாரையும் பார்க்கின்றபோது மைத்திரி தலைமை அணி வெற்றிக் கிண்ணத்தை சுவீகரிக்கும் போல் தெரிகிறது. 
ஆனாலும் போட்டி முடியும் வரை வெற்றி யாருக்கென உறுதியாகச் சொல்ல முடியாது.
காரணம்,
» சில Match கள் திடீரென U Turn எடுத்து விடுவதுமுண்டு. 
» போட்டி என்று வந்து விட்டால் Spot Fixing நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.
» வீரர்கள் ஊக்கமருந்து பாவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
» நடுவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு துடுப்பாட்டக்காரர்கள் போட்டி விதிமுறைகளை மீறி ஓட்டம் குவிக்க முயற்சிக்கலாம்.
» இன்னும்………………
எனவேபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments