Subscribe Us

ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கமுலாம் பூசபட்ட கார்களுடன் சவுதி கோடீஸ்வரர் ஆடம்பர வாழ்க்கை



சவுதி அரேபியாவின் மிகப்பெரும் கோடீசுவரர்  இளவரசர்  துர்கி பின் அப்துல்லா  தங்க தகடுகளால ஆன சூப்பர் காரில் வலம் வருகிறார். இளவரசர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான  பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார்.

அவரது சமூக வலைதள புகைப்படங்கள், வீடியோக்கள் அவரது ஆடம்பர வாழ்க்கையை பறைசாற்றுகின்றன.அதில் ஒரு புகைப்படத்தில் பாலைவன ஓட்டகம் ஒன்றை அவர் தனது விலைமதிப்பு மிக்க மெர்சிடஸ் ஜி63 ல் துரத்துகிறார்.மற்றொரு புகைப்படத்தில் மெர்சிடஸ் ஜீப்பின் டிரைவர் இருக்ககையில் சிறுத்தை ஒன்று நிற்கிறது.

தெற்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும்  ரூ.10 கோடி  மதிப்புள்ள தங்க கார்கள் உள்ளதாக இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்து உள்ளது.

Post a Comment

0 Comments