அல் ஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் ,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் தொடர்ச்சியான வேண்டுகோளிற்கிணங்க அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்ட மேர்சி லங்கா நிறுவன திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப் முனாஸ் அவர்கள் வாக்குறுதி அளித்தவாறு ஏற்கனவே மேர்சி லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வகுப்பறை கட்டிட தொகுதியின் மேல் பகுதியில் மேலும் ஐந்து வகுப்பறைகளும் ஒரு காரியாலமும் கட்டப்பட்டு வருகின்றது.
இக்கட்டிடத்தொகுதி இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஏப்ரல் மாதமளவில் வகுப்பறைகளுக்கு தேவையான சகல தளபாட வசதிகளுடன் பாடசாலைக்கு கையளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-Rizvi Hussain-
















0 Comments