Subscribe Us

header ads

தொழில்நுட்ப பயிற்சிகளுக்கான புத்தள நிலையம்.

G.C.E. (O/L) பரீட்சையோடு பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களை வளமான எதிர்காலமொன்றை நோக்கி வழிப்படுத்தும் நோக்கோடு தொழில்நுட்பபயிற்சி நெறிக்கான புத்தள நிலையம் (Puttalam Centre for Technical Training – PCTT) இல.17, சேர்விஸ் வீதி, புத்தளம் என்ற முகவரியில் 2015/03/15 முதல் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. 

இப்பயிற்சி நிலையமானது, புத்தளத்தில் இயங்கும் Friends of Insight என்ற சமூக நிறுவனத்தின் உறுப்பினர்களின் அயராத முயற்சியின் ஒரு விளைவாகும்.இந்நிலையம் Insight Institute of Management and Technology என்ற நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாக இயங்குகின்றது. Insightநிறுவனத்தின் இவ்வாறான இரண்டு நிலையங்கள் ஏற்கனவே கிண்ணியா, மாவனல்லை போன்ற பிரதேசங்களில் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன. இவ்வரிசையில் PCTT நிலையம் மூன்றாவதாக இணைந்து கொண்டுள்ளது.

இதன் தலைவராக தொழிலதிபரும், Friends of Insight அமைப்பின் தலைவருமான A. N. A. A. அலி சிமாக்கும், பணிப்பாளராக பொறியலாளர் S. M. M. ரிபாய் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்இந்நிறுவனத்தின் நிறைவேற்று குழுவில் கல்விமான்களும், துறைசார் நிபுணர்களும், பிரபல வர்த்தகர்களும் உறுப்பினர்களாக காணப்படுகின்றனர்.
பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்களின் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் ஆற்றல்களை விருத்தி செய்து, அவர்களை சிறந்த ஒழுக்க பண்பாட்டு விழுமியங்களுடன் கூடிய தொழில்நுட்பவியளாலர்களாக உருவாக்குவதே PCTT இன் பிரதான நோக்கமாகும். இதன் பயிற்சி நெறிகள் யாவும் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) பாடத்திட்டத்திற்கு அமைய நடைபெறுகிறது. பயிற்சியின் முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்படும். 

புத்தளத்தில் இவ்வாறான தொழில்நுட்ப பயிற்சி நிலையமொன்றின் தேவை பன்னெடுங்காலமாக உணரப்பட்டு வருவதுடன் அதனை நிறுவுவதற்கான போதிய முயற்சிகள் இதுகால வரை முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இக்குறைபாட்டால்எமது பிரதேச மாணவர்கள் தூர இடங்களுக்கு சென்று மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இவ்வாறான பயிற்சி நெறிகளில் கலந்து கொள்ளவேண்டிய நிர்பந்த நிலையே காணப்படுகின்றது. அத்துடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகள் எட்டாக்கனியாக காணப்படுகின்றன. இதனால் எமது இளைஞர்கள் பலவாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன் முழு சமூகமும் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறான காலகட்டத்தில் PCTT போன்ற நிறுவனங்களின் வருகை ஒரு ஆறுதலாகும் என பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தவகையில், புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள PCTT இன் இரண்டாவது வருடத்திற்கான பயிற்சி நெறிகள் எதிர்வரும் மே மாதம் முதல் தொடங்கப்பட இருப்பதுடன் பதிவுகள் இப்போதிருந்தே மேற்கொள்ளப்-பட்டுகின்றன. இந்த நிலையத்தில் Automobile Mechanic, AC & Refrigeration Mechanic, Building Service Technician, Building Construction Supervisor போன்ற பயிற்சி நெறிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட இருப்பது குறிபிடத்தக்க அம்சமாகும்.
மேலதிக தகவல்களுக்கு : 
PUTTALAM CENTRE FOR TECHNICAL TRAINING (PCTT),
No. 17, Service Road, Puttalam. 
Tel: 032 493 3330
Mobile: 076 859 7959
Email: putctt@gmail.com


Post a Comment

0 Comments