1.ஃபாஸிசம் வேரூன்றிய பல நாடுகளில் எல்லாம் தேசிய வாதமும் ,மத வன்முறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காணமுடியும் .
2.பர்மா நாட்டில் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் இனப்படுகொலைகள் அதற்க்கான தொடர்புகளை வரலாற்றின் ஆரம்பம் முதல் ஆய்வு செய்து பார்க்கையில் அதற்க்குக் காரணமான பர்மிய தேசியமும் புத்த அராஜகமும் திட்டமிட்ட ஃபாஸிசமே என்பதில் மிகையில்லை .
3.பல மதத்தினர் வாழும் ஒரு நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருக்கும் பெரும்பான்மை குழுக்கள் தேசியவாதத்தில் திளைத்து இருந்தால் அவை பகைமைக்கு வித்திடும் இனவாதமாகவே பார்க்கப்படும்
4.பர்மா சோசலிசத்திற்கான பர்மன் வழி என்ற அமைப்பு திட்டத்தின்கீழ் ஒரு கட்சி அமைப்பாக சோஷலிச தேசமாக நடத்தி செல்கின்றது. சோசலிசத்திற்கான பர்மன் வழிஎன்பதே பர்மிய மக்களின் முழக்கமாகவும் இருக்கின்றது.
5.மக்கள் தொகையில் அதிகமானவர்களாக இருக்கும் பர்மியர்களே ஆளும் சமூகமாகவும் தேசம் அவர்களின் பிடியிலேயே இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் சிந்தனை ஆகும் .அதற்கான பணிகளை நிறுவுவதும் , ஊக்குவிப்பதுமே அவர்களின் அடிப்படைக் கொள்கையும் செயல்த்திட்டமும் ஆகும் . ஆனால் இந்த சிந்தனையோ சர்வதேச விதிகளுக்கு உண்மையில் முரணானதே .
6.பர்மியர்களின் ஆதிக்கம் மற்றும் இனவாத அழுத்தத்தினாலும் பல சிறுபான்மை சமூகங்களுடன் பல கலப்புத் திருமணங்களும் ,பல கலப்பு கலாச்சாரங்களும் ,நாகரீங்களும் அதிகம் இருந்தது .
7.ஆனால் அரக்கன்பகுதியில் வசிக்கும் ரோஹிங்க்யா
முஸ்லிம்களிடமிருந்து மட்டும் பர்மர்கள் ஒதுங்கியே இருந்தனர். ரோஹிங்க்யா முஸ்லிம்களை வேற்றுக்கிரக வாசிகளைப் பார்ப்பது போலவே பர்மர்களின் பார்வைகள் இருந்தது .
8.அரக்கன் பகுதியில் வசிக்கும் ரோஹிங்க்யா முஸ்லிம்களை அழிப்பதும், மற்றும் அரக்கன் பகுதியின் வரலாற்றை அழிப்பதும் பர்மா அரசின் கொள்கையும் செயல்திட்டம் என ஆழ்ந்து நோக்கும் போதுதெளிவாகின்றது .
வரலாற்றை சிதைப்பது :
************************** ***********
1.அரக்கன் பகுதியில் தொன்று தொட்டு காலம் காலமாக
பர்மியர்கள் வசிப்பதாக காட்டுவதற்கும் ,முஸ்லிம்கள் வசிக்கவில்லை இல்லை என நிருபிப்பதற்கும் இனவாத சிந்தனைக் கொண்ட வரலாற்று ஆசிரியர்களுடன் ,பர்மா நாட்டின் அரசு அதிகாரிகள் அரக்கன் பகுதியின் வரலாற்றை சிதைத்தனர்.
2.தற்போது பாடசாலை ,கல்லூரி , பல்கலைக்கழகம் பரிந்துரைக்கப்படும் ஆவணங்களிலும் , புத்தகங்களிலும் ரோஹிங்க்யா முஸ்லிம்களின் வரலாறு காணப்படவில்லை .இதனால் பின்பு வரக்கூடிய சமூகங்கள் ரோஹிங்க்யா முஸ்லிம்களை பர்மாவின் சொந்த மக்களாகவே கருதாத நிலை ஏற்பட்டு விட்டது .
இனப்படுகொலை கொள்கையை கையாளுதல் :
************************** ************************** *********************
1.பர்மா அரசின் அன்றாட நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், ஊடகங்கள் ,பிரச்சாரங்கள் மூலம் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் தங்கள் நாடு பிரஜைகள் இல்லை என்ற பொய்யான கருத்துக்களை பதிய வைத்து உலகை நம்பவைத்தனர் .
2.1964 ஆம் ஆண்டில் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்காவின் ஆறாவது பதிப்பில் முஸ்லிம்களைக் குறித்தோ ,இஸ்லாமைக் குறித்தோ பர்மாவில் எந்த தகவலும் இல்லை .ஆனால் 4 கோடி பர்மா மக்களில் 70 லட்சம் முஸ்லிம்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது .
3.இதன் தொடர்ச்சியாக 1982 ஆம் ஆண்டில் யு நே வின் என்பவரின் சர்வதிகார ஆட்சியில் குடியுரிமைச்சட்டம் இயற்றப்பட்டது .இந்த சட்டத்தினால் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் நாட்டின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்கள் .இதனால் அந்நியர்களாகவும் ,நாடற்ற மக்களாகவும் ஆக்கப்பட்டார்கள். இதனால் அரக்கன் செய்தி விளக்கச்சுவடியில் இவர்களின் பெயர்களே இல்லாமல் போனது .
4.வரலாற்றை திருத்தி அமைக்க பல திட்டங்கள் தீட்டப்பட்டாலும் , RSO என்ற அமைப்பு அரக்கன் வரலாற்றை மிக கவனமாக ஆய்வு செய்து தகவல்களை தொகுத்து இருக்கின்றது .
5.தற்போது பர்மா இனவாத குழுக்கள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் ரோஹிங்க்ய முஸ்லிம்களுக்கு எதிராக போடப்பட்ட முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கும் உலக மக்களுக்கு உண்மை வரலாற்றை உரக்க சொல்வதற்கும் ஆதாரப்பூர்வமான நம்பகமான அடிப்படையில் என் ஆய்வுத் தகவல்கள் மற்றும் அரக்கன் ஊடக செய்திகள் திகழும் என நம்புகின்றேன்.
- அபூஷேக் முஹம்மத்
தொடரும்.....
0 Comments