ரோஹிங்க்யா குறித்த ஆரம்பகட்ட தேவையான அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு ,இஸ்லாம் பரவிய கால கட்டம் , கி. பி.7 ஆம் நூற்றாண்டு முதல் மன்னர் ஷா சுஜா வரை உள்ள முக்கிய நிகழ்வுகள் விரிவாக வேறொரு தலைப்பின் கீழ் அறியலாம் .
இடையில் பர்மாவில் அரக்கன் பகுதியில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்று இறுதியில் பௌத்தர்களால்வீழ்ந்து பௌத்த சிந்தனையாளர் பொடவ்பய ஆட்சி எழுந்தது அதில் இருந்து பர்மா சுதந்திரத்திற்கு பிறகு வரை உள்ள சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம் .
பர்மியர்களின் ஆட்சியில் அரக்கன் பகுதி :
************************** ************************** **********
பர்மாவின் அரக்கன் பகுதியின் வரலாற்றில் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியர்களின் ஆட்சி அதிகாரத்தை பொடவ்பய என்ற அரசர் படையெடுத்து அரக்கனைக் கைப்பற்றினார் .
பொடவ்பய வின் 42 வருட `ஆட்சியில் முஸ்லிம்கள் மற்றும் புத்த சமூகங்கள் இருவரையும் கொன்றனர். பள்ளிவாசல்களும் ,மதரசக்களும் தரைமட்டமாக்கப்பட்டன.
இஸ்லாமிய சின்னங்கள் எல்லாம் கண்களுக்கு புலப்படாத அளவிற்கு பொடவ்பய அரசர் அழித்தொழித்தார். பல முஸ்லிம்களும் ,புத்த மதத்தவர்கள் வங்காளத்திற்கு இடம் பெயர்ந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் வந்தனர் . அதில் பலர் போர் கைதிகளாகவும் ,சிறை கைதிகளாகவும் ஆயினர் .
பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பில் அரக்கன் பகுதி :
************************** ************************** ***************
1823 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரக்கன் பகுதியைக் கைப்பற்றியது. அரக்கன் பகுதியை விட்டு வெளியேறியவர்களில் சிலர் தங்களது
சொந்த இடத்திற்கே 40 வருடங்களுக்குப் பிறகு திரும்பினர். அவர்களின் உறவினர்கள் வங்காளத்திலேயே இருந்தனர்.
தற்போது அவர்கள் ரோஹை என அழைக்கப்படுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியில் அரக்கன் மற்றும் வங்காளதேச மக்கள் மத்தியில் நல்லுறவு ஏற்பட்டது .
வியாபாரம் போன்ற சில விடயங்களில் சுதந்திரம் இருந்தாலும் அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை ஓரங்கட்டுவதைப் போன்ற சம்பவங்களே அரங்கேறின.
1924 இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மற்றும் பிரிட்டிஷ் படைகள் அரக்கன் பகுதியில் தான் மோதிக்கொண்டனர் என்று குறிப்புக்கள் பேசுகின்றது .
பர்மாவின் சுதந்திரப் போராட்டம் :
************************** ************************
1908 முதல் பிரிட்டிஷ் அரசிற்கு எதிரான சுதந்திரப் போராட்டம் முழு மூச்சில் பர்மாவின் நடை பெற்றன.
மக்களை பிரித்தாள வேண்டும் என்ற கொடிய நோக்கத்துடன்பர்மர்கள்புத்த மதத்தை
பின்பற்றுபவர்களை இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரங்கள் மூலம் மூளை சலவை செய்தனர்.
இதன் காரணமாக சுதந்திரத்திற்குப் பிறகு பர்மர்கள் முழுமையாக நாட்டை ஆட்சி செய்வதற்கு திட்டம் வகுத்தனர் .
1937 ஆம் ஆண்டில் பர்மாவிற்கு சுய ஆட்சி வழங்கப்பட்டது . பர்மர்களின் கைகளில் ஆட்சி சென்றடைந்தது. அதன் பிறகு 1938 ஆம் ஆண்டில் 30000முஸ்லிம்கள் மத்திய மற்றும் தெற்கு பர்மாவில் கொல்லப்பட்டனர்
1942 ஆம் ஆண்டில் 1,00,000 எண்ணிக்கைக்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர் . 5,00,000 எண்ணிக்கைக்கும் அதிகமானோர் தங்களின் வீடுகளை இழந்தனர் .
1948 ஆம் ஆண்டில் ஜனவரி 4 ஆம் திகதி பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்தது .
பாராளுமன்ற ஜனநாயகம் 1948 -1962:
************************** ************************** *****
பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டியடிக்க பர்மா அரசு ஜப்பானியர்களின் உதவியை நாடியது. பின்னர் ஜப்பானியர்களின் இருப்பு கசக்க ஆரம்பித்தவுடன் பிரிட்டிஷ் படையுடன் ஒப்பந்தம் போட்டு ஜப்பானியர்களை விரட்டியடித்தது .
அதன் பிறகு , பிரிட்டிஷ்காரர்கள் 1945 ஆம் ஆண்டில் பர்மா வந்தனர்.பர்மாவின் தேசத் தலைவர் ஜெனரல் ஆங் சன், பிரிட்டிஷ் பிரதம மந்திரி அட்லி உடன் பர்மாவுக்கு சுதந்திரம் வழங்கும்படியும் , அதற்காக அப்பகுதி மக்களை பர்மாவினுள்ளே வைத்து இருப்போம் என ஒப்பந்தமிட்டார். தேசத் தலைவர் ஜெனரல் ஆங் சன் நாடு முழுவதும் பயணம் செய்து அனைத்து மக்களும் நாட்டின் உள்ளே தான் இருக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
பர்மாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு புத்த மதத்தினருக்கே அனைத்திலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு இருந்தது. இதன் விளைவாக அதிகாரப் போதை தலையில் ஏறிய பிறகு 1958 ஆம் ஆண்டில் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கிராமங்களை நெருப்பால் எரித்தனர். இந்நிகழ்வுகளின் நினைவுகள் இன்றளவும் ரோஹிங்க்யா முஸ்லிம்களிடம் உள்ளது .
80 சதவிகிதம் வடக்கு அரக்கன் பகுதிகள் இனவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது . அந்த கொடுங்கோன்மை ஆட்சியில் எதிராக கிளர்ந்து எழுவதற்கு ரோஹிங்க்யா முஸ்லிம்கள் கட்டயாமாக தள்ளப்பட்டனர் .
அரக்கன் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் மனோ நிலயை திருப்பும் நோக்கமாக ஆட்சியாளர்கள் அவர்களுக்கென அரசுப் பணிகளை அளித்தனர்.
ரோஹிங்க்ய முஸ்லிம்களை பர்மாவை சார்ந்த சமூகம்
என அறிவித்தனர் . பர்மா பிராட்கேஸ்டிங் சர்வீஸ் போன்றவற்றில் ரோஹிங்க்யா பூர்வாங்க மொழியில் வாரம் இருமுறை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பினர் . பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக ரோஹிங்க்யா முஸ்லிம்களை நியமித்தனர் .
அதே சமயம் பர்மா ஆட்சியாளர்கள் ரோஹிங்க்யா முஜாஹிதீன்களுக்கு பல வாக்குறுதிகளை தந்தனர் .ஆனால் ரோஹிங்க்யா முஜாஹிதீன்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை . இறுதியில் ராணுவ ரீதியான அழுத்தங்களை
தந்தனர் . இறுதியில் 1961 ஆம் ஆண்டில் இனவாத அரசாங்கம் அவர்களை நம்பவைத்து பல சூழ்ச்சிகளின் மூலம் கவிழ்த்தனர்.
யு நு ஆட்சியாளரின் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை யுநு வால் எதிர் கொண்டுபிரச்சினையை சரி செய்ய முடியவில்லை . நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் குறித்து ராணுவத் தலைவர் நே வின் அவர்களுக்கும் சிறிதும் பிடிக்காமல் இருந்தது .
சோஷலிச ஆட்சியில் அரக்கன் மாகாணம் :
************************** ************************** ***************
ஜெனரல் நே வின் பிறகு பர்மாவை சோஷலிச அரசாக அறிவித்தார். பர்மா சோசலிஸ்ட் ப்ரோக்ராம் பார்ட்டி என்ற கட்சியின் பர்மா நாடு இயங்கியது. இந்தக் கட்சியில் 95 சதவிகிதம் இராணுவத்தினரும், சில புத்த மத மக்களும் உள்ளனர்
- அபூஷேக் முஹம்மத்
தொடரும்...
தொடரும்...
0 Comments