தமது அமைப்பு சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே போராடுவதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலன்த பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர், பாதுகாப்பு தரப்பினர் சார்பில் முன்னிலையானமையே அவர் இழைத்த தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இன்று பெல்மதுளை நகரில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன் எடுக்கப்பட்டது.


0 Comments