இலங்கையின் முதலாவது சுதந்திர தினத்தின் போது தமிழ் மொழியிலும் தேசிய கீதம்பாடப்பட்டுள்ளது.
இலங்கை 68 வது சுதந்திரத்தினத்தை நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் நாளைய தினம் தேசிய கீதத்தை தமிழிலும்,சிங்களத்திலும் பாடுவது தொடர்பில் பலரும் பலகருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக ஒன்றிணைந்த எதிர்கட்சிகளே தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றது.
அத்துடன் தேசியகீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கான எதிர்ப்பினை முன்னாள் ஜனாதிபதியும்,பாராளமன்ற உறுப்பினருமான மஹிந்த நேற்றைய தினம் வெளியிட்டமை குறிப்பிடத்ததாகும்.
அத்துடன் பலரது கோரிக்கைகமைய நாளைய 68 வது சதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளித்துள்ளமை வரவேற்கப்பட கூடியதும்,அனைத்து சிறுபான்மையின மக்களால் நன்றி கூறத்தக்க விடயமாகும்.
இந்த வகையில் இலங்கை சுதந்திரம் பெற்று சரியாக ஒருவருட பூர்த்தியின் போது அதாவது 1949 ஆம் ஆண்டு தேசிய கீதம் தமிழ் மொழியிலும் பாடப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் தற்போது கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுதந்திர தினத்திற்கான அழைப்பிதல் இரண்டு பெரும்பான்மை மொழிகளிலும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.


0 Comments