பொத்துவில் பாக்கியவத்தை அல்- நஜாத் மஹல்லாவைச்சேர்ந்த இஸ்மாயில் மீராசாகிபு , ஹாஜாமுகைதீன் ஆசியாஉம்மா என்பவரின் மகன் முகம்மட் ஆத்திப் தரம்- 02ல் அல் ஹுதா பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.
ஏழு வயதுடைய இச்சிறுவனுக்கு இரண்டு கிட்னிகளும் பழுதடைந்து ஒரு கிட்னி முற்றாக செயலிழந்துவிட்டது.
இருக்கின்ற ஒரு கிட்னியாவது செயற்பட வைக்கவேண்டுமாயின் அறுவைச்சிகிச்சை செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் காணப்படுகிறார்.
இதற்காக சுமார் பத்து இலட்சம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் அறிவித்திருக்கின்றார்கள்
ஆனால் கூலித்தொழில் செய்து தனதுகுடும்பத்தை காப்பாற்றிவரும் இப்பெற்றோர்களால் இதனை செய்ய முடியாதுள்ளது.
(ஒரு ஈச்சம் பழத்தை கொடுத்தாவது நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கல் )என்று நபி (ஸல்)அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
ஆகவே எந்தவித உதவியும் இன்றி இருக்கும் இக்குடும்பத்துக்கு தங்களால் முடிந்தளவு நன்கொடைகளை வழங்கி இச்சிறுவனை எம்மைப்போல வாழ்வதற்கும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
Phone-075 6392343
செய்தி ஆசிரியர் - நூர்தீன் பௌசர்
0 Comments