Subscribe Us

header ads

UPDATE: யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்


கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைகாட்சியின் விரிவாக்கல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமை மற்றும் காரணங்கள் கூற முடியாத நிதி செலவீடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன் எடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த ஐந்து பேரும் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி காவற்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments