Subscribe Us

header ads

ஆட்சி மாற்றத்தினால் தண்டனை குறைந்தது

சவுதியில் இலங்கை பெண்ணை கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று தீர்ப்பு சாதாரண சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு நல்லப்பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது.

ஏற்கனவே மூதூர் யுவதி ரிசானா நபீக் மரணதண்டனையை எதிர்நோக்கியபோது அன்று பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஒரு பெண் மரணதண்டனையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளமைக்கு பின்னால்  இலங்கை அரசாங்கத்தின் செல்வாக்கை உள்நாட்டில் உயர்த்தும் முகமாக  மேற்கத்தைய சக்திமிக்க நாடு ஒன்று  சவுதி அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட செல்வாக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் எதிர்நோக்கியுள்ள சவால்கள் அதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பிரசாரத்துக்கு இந்த தண்டனைக்குறைப்பு உதவலாம் என்று ஆய்வாளர்கள் எதிர்வுகூறுகின்றனர்.

முறையற்ற தொடர்பு என்ற குற்றச்சாட்டின்பேரில் குறித்த இலங்கை பெண்ணுக்கு கல்லால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்ற தீர்ப்பை சவுதி நீதிமன்றம்  ஏற்கனவே வழங்கியிருந்தது.

எனினும் அது நேற்றைய நீதிமன்ற அமர்வின் போது சாதாரண சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments