Subscribe Us

header ads

உயிரை விட நான் தயார்- பொதுபல சேனா

னது மரணத்தின் மூலம் சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால், மரணத்தை எதிர்நோக்க தயாராக இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையில் பௌத்த சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதன் காரணமாகவே நாங்கள் அதனை தீர்ப்பதற்காக குரல் கொடுத்து வருகின்றோம்.
என்னை கொலை செய்தோ, கைது செய்தோ, என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியோ பிரச்சினை தீரும் என்றால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றேன்.
விடுதலைப் புலிகள் மற்றும் அல்-குவைதா அமைப்புகளை போல் நாங்கள் துப்பாக்கி பிரயோகம் செய்ய மாட்டோம் என்ற காரணத்தினாலேயே வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றவர்கள் பொதுபல சேனா அமைப்பை தொடர்ந்தும் விமர்சித்து வருவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments