கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு தொலைபேசி ஊடாக நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக வெளியிட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இம்முறை பரீட்சையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தொழில்நுட்பப் பிரிவு பரீட்சைகளில், செயன்முறை பரீட்சைகளை நடாத்த கால தாமதம் ஏற்பட்டது.
இந்த அனைத்து தாமதங்களையும் தாண்டி 2014ம் ஆண்டைப் போன்றே இந்த ஆண்டிலும் 31ம் திகதிக்கு முன்னதாக பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும்.
நாடாளுமன்றத் தேர்தல்கள் காரணமாக பத்து நாட்கள் பரீட்சை நடத்த முடியவில்லை.
எனினும், திட்டமிட்டவாறு இந்த மாத இறுதிக்குள் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.


0 Comments