முதலாளி திட்டியதற்காக ஜன்னல் வழியாக கீழே குதித்த அலுவலக ஊழியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், அலுவலகத்தில் அமர்ந்து அனைவரும் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது பெண் அலுவலக ஊழியரின் மேஜையின் அருகில் வந்த முதலாளி, சில பேப்பர்களை அவர் மேஜையில் தூக்கியெறிந்துவிட்டு, திட்டிவிட்டு செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த அலுவலக ஊழியர் தனது இருக்கையை விட்டு எழுந்து, அருகில் இருந்த ஜன்னல் ஓரத்திற்கு சென்று, திடீரென்று குதித்துவிடுகிறார்.
இதனைப்பார்த்த அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஜன்னல் ஓரத்தில் வந்துநின்று கூச்சலிடுகின்றனர். இதனுடன் அந்த வீடியோ நிறைவுபெறுகிறது.
ஆனால், இந்த வீடியோ எங்கு? எப்போது? எடுக்கப்பட்டது மேலும், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில் நம்பகத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


0 Comments