அளுத்கமவில் ஜூன் 15 ஆம்
திகதி இடம்பெற்ற பதற்றநிலை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று சி. ஐ. டி யினரால் விசாரணை
க்குட்படுத்தப்பட்டார்.
சம்பவ தினத்தன்று அளுத்கமவில் நடத்தப்பட்ட பொதுபலசேனா கூட்டத்தில்
கலகொடஅத்தே ஞானசார தேரர் நிகழ்த்திய உரை மற்றும் பேருவளை. அளுத்கம
சம்பவங்கள் குறித்தும் வாக்கு மூலங்களை சி. ஐ. டியினர் நேற்று
அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
நேற்று நண்பகல் ஒரு மணி முதலே கலகொடஅத்தே ஞானசார தேரருக்கான சிஐடி
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அளுத்கம சம்பவம் தொடர்பில் கடந்த 30 ஆம் திகதியன்று சிஹல ராவயே
அக்மீமன தயாரத்ன தேரர் சி. ஐ.டி யினரால் விசாரணைக்குட் படுத்தப்பட்டார்.
பொதுபலசேனாவின் அளுத்கம கூட்டத்தில் உரையாற்றிய ஏனைய உறுப்பினர்களையும்
சிஐடி யினர் விசாரணைக்குட்படுத்தவிருப்பதாக பொலிஸ் பேச்சாளர்
தெரிவித்தார்.
பேருவளை, அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரையில் 117 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 88 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட
துடன் 25 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 04 பேர்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


0 Comments