Subscribe Us

header ads

விசாரணைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மஹிந்த!

காணாமல் போகச்செய்யப்பட்ட முன்னாள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் விசாரணையாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளின் கூட்டு இதனை தெரிவித்துள்ளது.

எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுத்துறையினரை அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்.

இதன்பின்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டே சட்டத்தரணிகளின் கூட்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வாளர்கள், அச்சுறுத்தப்படுவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

கோத்தபாய ராஜபக்சவே இதற்கெல்லாம் காரணம் என்றுக்கூறினால் குறித்த புலனாய்வாளர்களை விடுவிப்பதாக விசாரணையாளர்கள் தெரிவிப்பதாகவும் மஹிந்த குறிப்பிட்டிருந்தார்

ஏற்கனவே எக்னெலிகொட கடத்தப்பட்டு கிரித்தலே இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்ற தகவலை தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இராணுவப்புலனாய்வினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் எதிர்த்து வருகின்றனர்.

இதேவேளை, மனித ஆகுதியை மஹிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்தமை காரணமாகவே எக்னெலிகொட இரண்டு தடவைகள் கடத்தப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் பிபிசி அண்மையில் மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எக்னெலிகொட தொடர்பில் கேள்வி எழுப்பியபோது அவர் கோபமாக தொலைபேசி உரையாடலை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments