பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் 27 வருட கடுழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாகியிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
மரபணு பரிசோதனையின் அடிப்படையிலேயே இந்த விடுதலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குருநாகலை சேர்ந்த ஒருவருக்கு 2012ஆம் ஆண்டு குருநாகல் மேல்நீதிமன்றம் 27 வருட கடுழிய சிறைத்தண்டனையை விதித்தது.
எனினும் 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் குற்றவாளியாக காணப்பட்டவர் நிரபராதி என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டார்.


0 Comments