நூறாண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்று வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்தது நாங்கள் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிமை கோரியுள்ளார்.
இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சம்பிக்க ரணவக்க,
முன்னொரு காலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் மட்டும் ஆட்சி அதிகாரம் தங்கியிருந்தது.
ஆனால் இன்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியின் மூலம் மக்களை அதிகாரம் கொண்டவர்களாக மாற்றியுள்ளார்கள்.
மஹிந்தவின் ஆட்சியில் ஊழல், மோசடி, லஞ்சம் என்பன சட்டரீதியாக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக பொதுமக்கள் அந்த ஆட்சியை வெறுத்தார்கள்.
எங்களது அரசாங்கம் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வகையிலான எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை.
சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பு போன்றவற்றால் நாங்கள் பொதுமக்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளோம்.
இதன் காரணமாக இந்த ஆட்சியை உறுதிமிக்க ஆட்சியாக வர்ணிக்க முடியும் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.


0 Comments