Subscribe Us

header ads

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது ஏன்?! மத்துமபண்டார விளக்கம்

நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் நோக்கிலேயே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ரத்து குறித்து ஊடகமொன்று கேள்வியெழுப்பியிருந்தது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பம் முதலே ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றது.

இதன் காரணமாகவே குறித்த பிரேரணைக்கு அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் எமது கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறாது.

அத்துடன் நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் போது மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை இலகுவாக எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments