ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகம் மிக விரைவில் கட்டார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதிகாரத்தில் இருந்த நூறு நாள் அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இலங்கை வந்திருந்த கட்டார் நாட்டு முக்கியஸ்தர் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
கட்டார் விமான சேவை நிறுவனம் கனடா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுக்கான விமான சேவையை விஸ்தரிக்கும் ஆர்வத்தில் உள்ளது. எனினும் தனியார் நிறுவனம் என்ற வகையில் விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் பெரும் கட்டணமொன்றை செலுத்த நேரிடும்.
எனினும் ஒரு நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம் அவ்வாறு செலுத்த வேண்டியதில்லை. இதன் காரணமாகவே குறித்த கட்டார் நிறுவனம் ஸ்ரீலங்கன் விமான சேவையை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் அரசாங்கத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சர் ஒருவரின் மைத்துனர் ஒருவர் கட்டார் நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதன் காரணமாக அவர் மூலமாகவும் இது குறித்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


0 Comments