Subscribe Us

header ads

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வட்சப் மூலம் தலாப் - கொடுமையிலும் கொடுமை

அண்மையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞர் வாட்ஸ்அப் மூலம் தலாக் சொல்லியுள்ளார்.

திருமணம் ஆகி சில மாதங்கள்தான் ஆகின்றன.

வாட்ஸ்அப்பில் முத்தலாக் சொல்வது கொடுமை எனில்  அதை ஏற்றுக்கொண்டு தம்பதியினரைப் பிரித்து வைப்பது அதைவிடக் கொடுமை.

“ஒரே மூச்சில் மூன்று தலாக்” என்பது இஸ்லாத்தில்  இல்லாத நடைமுறை, அதை மார்க்க அறிஞர்கள் அனுமதிக்கக் கூடாது என்று அந்தக் கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன்.

மூன்று வார்த்தைகளைச் சொல்லிவிட்டால் ஒரு பெண்ணின் வாழ்வை அழித்துவிடலாம் என்று சட்டம் அருளுவதற்கு இறைவன் ஒன்றும் முட்டாள் அல்ல. 

இறைத்தூதர் கொடுமையானவரும் அல்லர். இல்லற வாழ்க்கை என்பது எப்போதும் தென்றல் தவழும் 

நந்தவனம் அல்ல. கணவன்- மனைவிக்கு இடையே  சிக்கல்கள், பிரச்னைகள் வரத்தான் செய்யும். அவற்றைத் தீர்ப்பதற்கான அழகான வழிமுறைகளை இறைவனும் இறைத்தூதரும் தந்துள்ளார்கள்.

“அவற்றில் எந்த ஒன்றையுமே கடைப்பிடிக்க மாட்டோம், மனம் விரும்புவதுபோல் தலாக் சொல்வோம்; 

மார்க்க அறிஞர்களும் அதற்கு ஒப்புதல் அளிப்பார்கள்” எனில் இவர்கள் இறைவனுடனும் இறைத்தூதருடனும் விளையாடுகிறார்கள் என்று பொருள்.

முத்தலாக்கை எதிர்த்து எதையாவது எழுதினால் “உனக்கு அரபி மொழி தெரியாது, நீ மதரசாவில் படிக்கவில்லை” என்று சிலர் பூச்சாண்டி காட்டி என் மீது பாய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. ஒரே மூச்சில் முத்தலாக் எனும் கொடுமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருப்பேன்.
- சிராஜுல்ஹஸன்.
-Jaffnamuslim-

Post a Comment

0 Comments