பொது இடங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் என்றுமே விஜயகாந்துக்கு நிகர் விஜயகாந்தே.
மேடைகளில் கண்ணீர் விட்டு அழுவது , யோகா நிகழ்ச்சியில் முக பாவனையாலேயே சிரிப்பை வரவழைப்பது , தேர்தல் மேடைகளில் மிமிக்ரி , ஊடகங்கள் மீதான பாய்ச்சல் என விஜயகாந்தின் அரசியல் வரலாறு சுவாரஸ்யமானது.
அதேபோல் சர்ச்சைகளிலும் சிக்குவது அவருக்கு புதிதல்ல, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொது இடத்தில் வைத்து கட்சித் தொண்டரை தாக்கி கண்டனத்துக்குள்ளான விஜயகாந்த் , மீண்டும் அத்தகைய சிக்கலில் சிக்கியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்க்க சென்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், திடீரென்று பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமது வேன் சாரதியையும் விஜயகாந்த் கோபத்தில் எட்டி உதைத்தார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
இக்காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.


0 Comments