கொழும்பு நகர்பகுதியில் இடம்பெறும் சில விஷமிகளின் செயற்பாட்டால் நகரின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் சுகாதாரத்திற்கும் கேடு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் ஆச்சரியமாக நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கமும் நாட்டு மக்களும் முன்னின்று செயற்படுகின்ற அதேவேளை, சில விஷமிகளின் செயற்பாடு நாட்டை சீரழிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கின்றது.
அவ்வாறானதொரு செயற்பாடு எமது இணையத்தள செய்தியாளரின் கையடக்கத்தொலைபேசியில் இன்று பதிவாகியுள்ளது.
கொழும்பு வடக்கு மட்டக்குளி பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதால் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மனித மலக்கழிவுகளை சுத்திகரித்து அப்புறப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள நபர்கள், அதனை சுத்திகரித்த பின்னர் உரிய இடத்திற்கு கொண்டு செல்லாது நகரில் தண்ணீர் வடிந்தோடும் வாய்க்கால்களில் அதனை கொட்டுகின்றனர்.
இதனால் நோய் தொற்றக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் துர்நாற்றம் வீசுவதால் சிறு குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தனியார் நிறுவனங்களின் செயற்பாடா அல்லது அரச நிறுவனங்களின் செயற்பாட எனத் தெரியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தனியார் நிறுவனங்களின் செயற்பாடா அல்லது அரச நிறுவனங்களின் செயற்பாட எனத் தெரியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான செற்பாடுகளுக்கு கொழும்பு மாநகர சபையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொலிஸாரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments