Subscribe Us

header ads

மு.காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியல்ல இது முஸ்லிம் சமூகத்தின் கட்சியாகும் - மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி இது ஓர் அரசியல் கட்சியல்ல இது முஸ்லிம் சமூகத்தின் கட்சியாகும் என்பதை இன்றைய இளைஞர்கள் மத்தியில் நாம் தெளிவு படுத்தவேண்டிய கடமைப்பாடு எமக்குள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமாகிய சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நேற்று சனிக்கிழமை (17) இரவு அட்டாளைச்சேனை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின்போதே கிழக்கு மாகாண சப உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடரந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த தினத்தை முதன் முறையாக அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. அன்றைய தினம் இடம்பெறும் இளைஞர் மாநாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 204 முஸ்லிம் கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 1000 இளைஞர்களை உள்ளடங்கிய மாபெரும் இளைஞர் மாநாடாகவும் அமையவுள்ளது.

அந்மாநாட்டை வெற்றியுடன் கொண்டு செல்வதற்கு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள 18 கிளைக் குழுக்களிலும் இருந்து ஒரு பிரிவில் சுமார் 8 பேரை தெரிவுசெய்தல் வேண்டும். விஷேடமாக அட்டாளைச்சேனைக்கு மட்டுமே ஒரு பிரிவில் 8 பேரை தெரிவு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

இம்மாநாட்டில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் ஞாபகார்த்த விருது ழங்கப்படவிருப்பதுடன் கட்சி எதிர்கொள்ளும் சவால்முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவாலுக்கு கட்சி செலுத்தி வரும் வாகிபாகங்கள் போன்ற விடயங்கள் தொடர்பான ருத்துரைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், எம்.எல்.கலீல், மத்திய குழுவின் செயலாளர் எம்.ஏ.சீ.ஹாரீத், ஆலோசகர்களான யூ.எம்.வாஹிட், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர் உள்ளிட்ட மத்திய குழுவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments