Subscribe Us

header ads

மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தி: படிக்கட்டுகளில் ஏறும் சக்கர நாற்காலி - சுவிட்ஸர்லாந்தில் கண்டுபிடிப்பு...

நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த நூற்றாண்டில் ஊன்றுகோல்கள் மட்டுமே பெருந்துணையாக இருந்தன. பின்னாட்களில், செயற்கை கால்களும், சக்கர நாற்கலிகளும், இயந்திர சக்கர நாற்கலிகளும் இவர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஆகிவிட்டது.

என்னதான், இயந்திரங்கள் மூலம் சக்கர நாற்காலிகள் இயங்கினாலும் சாய்தளம் மற்றும் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறியோ, இறங்கியோ செல்வது என்பது பலருக்கு இயலாத காரியமாகவே இருந்துவந்தது. இந்த பெரும்குறையை சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

பெல்ட் போன்ற ரப்பர் பட்டையை இயங்கச் செய்யும் ஒரு பொத்தானை அழுத்துவதன்மூலம், சமதரையில் சென்று கொண்டிருக்கும் இந்த சக்கர நாற்காலிகள் வினாடிக்கு ஒரு படிக்கட்டு வேகத்தில் எத்தனை மாடிகளில் வேண்டுமானாலும் வெகுஇலகுவாக ஏறி, இறங்க முடியும் என இந்த அதிநவீன சக்கர நாற்காலியை உருவாக்கிய பத்து மாணவர்கள் கொண்ட குழு அறிவித்துள்ளது.

'ஸ்கேலெவோ' என பெயரிடப்பட்டுள்ள இந்த சக்கர நாற்காலியின் மூலம் 17 முதல் 34 டிகிரி கோணம் வரை வளைந்து செல்லும் குறுகலான படிக்கட்டுகளிலும் எளிதாக ஏறி, இறங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சக்கர நாற்காலி வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வரும்போது இதன் விலை தற்போதைய சாதாரண இயந்திர சக்கர நாற்காலியைவிட சற்றே கூடுதலாக இருக்கும் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது.

Post a Comment

0 Comments