மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் மாணவனொருவனின் பாடசாலை காற்சட்டை மற்றும் சேர்டின் கைகளை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனொருவனின் சீருடையையே , பௌத்த சமயம் கற்பிக்கும் ஆசிரியர் வெட்டியுள்ளார். உடையை இறுக்கமாக அணிந்தமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சேர்ட்டின் கையை வெட்டிய போது மாணவனின் கைகளிலும் காயமேற்பட்டுள்ளதாக மாணவனின் தாய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. குடும்ப வறுமை காரணமாக மாணவனிடம் இரண்டி சோடி ஆடைகளே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.-Jaffna Muslim-
0 Comments