Subscribe Us

header ads

சிரி­யாவில் புதிய தாக்­கு­தல்­களில் 370 பேர் மரணம் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் இடம்­பெ­யரும் அபாயம்

சிரி­யாவில் இடம்­பெற்று வரும் மோதல்கள் கார­ண­மாக மேலும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் இடம்­பெ­யரும் சூழ்­நிலை தோன்­றி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை செவ்­வாய்க்­கி­ழமை எச்­ச­ரித்­துள்­ளது.

மேற்­படி தாக்­குதல் நட­வ­டிக்­கை­களால் 370 பேருக்கும் அதி­க­மா னோர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் பலர் பொது­மக்கள் எனவும் அந்த சபை கூறு­கி­றது.கடந்த செப்­டெம்பர் 30 ஆம் திகதி ரஷ்யா சிரியா மீது தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது முதற்­கொண்டு சிரிய அர­சாங்கப் படை­யி­னரால் அலெப்போ நகரில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் கார­ண­மாக அங்கு பாரிய இடம்­பெ­யர்வு ஒன்று ஏற்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.
அலெப்போ நகரின் தென்­மேற்கு புற­ந­கரப் பகு­த­க­ளி­லி­ருந்து சுமார் 35,000 பேர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கார ஒருங்­கி­ணைப்பு பிரிவின் பேச்­சாளர் வனேஸா ஹுகு­யனின் தெரி­வித்தார்.
அவ்­வாறு இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் மாகா­ணத்தின் மேற்­கேயுள்ள தற்­கா­லிக தங்­கு­மி­டங்­க­ளிலும் உற­வி­னர்கள் வீடு­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ள­தாக அவர் கூறி னார்.
2011 ஆம்­ ஆண்டு மார்ச் மாதம் சிரி­யாவில் மோதல்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு 250,000 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பல மில்­லி­யன்­க­ணக்­கானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
ரஷ்­யா­வா­னது சிரிய ஜனா­தி­பதி பஷார் அல்–அஸாத்தின் படை­யி­ன­ருக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகையில் அந்­நாட்டில் 500 க்கும் அதி­க­மான வான் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது.
மேற்­ப­டி­ ரஷ்ய விமா­னங்­களின் தாக்­கு­தல்­களில் 120 பொது­மக்கள் உட்­பட குறைந்­தது 370 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தது.
ரஷ்ய தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளது மொத்த தொகை தொடர்பில் மேற்­படி நிலை­யத்தால் அறிக்கையிடப்படுவது இதுவே முதல் தடவையாகும்.லதாகியா மாகாணத்தில் திங்கட்கிழமை ரஷ்ய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 45 கிளர்ச்சியாளர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments