பொத்துவில் கரைவலை மீனவர்கள் எதிர்நோக்கிய நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் நீண்ட நாள் பிரச்சினையினை உடனடியாக தீர்வுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும், சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமின் இணைப்பாளருமான எம்.எச்.அப்துல் றகீம் மேற்கொண்டதையடுத்து பொத்துவில் கரைவலை மீனவர்கள் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிமை சுகாதார அமைச்சில் சந்தித்து தங்களது பிரச்சினைகளை முன்வைத்தனர்.
மீனவர்கள் கடன்பட்டு கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும், தொழில் செய்ய அரசாங்கம் தடுத்தால் மீனவர்கள் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லையென்றும் இதனால், மீன்பிடி தொழிலில் பாதிப்படைந்த குடும்பத்தினர் நடுத்தெருவில் கையேந்தும் நிலை உருவாகும் எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.
உடனடியாக இதற்குரிய தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் பொத்துவில் கரைவலை மீனவர்களை அழைத்துக்கொண்டு மீன்பிடி கடற்றொழில் அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடியமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார்.
இப்பேர்ச்சுவார்த்தையை அடுத்து மீன்பிடியமைச்சர் தொடர்ந்தும் பொத்துவில் கரைவலை மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்குரிய அனுமதியினை வழங்கியுள்ளார். இதனால் பொத்துவில் பிரதேசத்தில் கரைவலை மீனவர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதற்காக உடனடி நடவடிக்கை எடுத்த பிரதியமைச்சர் பைசால் காஸிமுக்கு பிரதேச மீனவர்களும் பொது மக்களும் நன்றி தெரிவிக்கன்றனர்.
பி. முஹாஜிரீன்
0 Comments