Subscribe Us

header ads

கொழும்பு நகர வாகன நெரிசல்: அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசல் தொடருமாயின் , 2020 ஆம் ஆண்டளவில் அது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமையுமென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் நிலவும் வாகன நெரிசல் தொடர்பில் போக்குவரத்து தொடர்பான நிபுணர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினசரி கொழும்பிற்குள் , சராசரியாக ஒரு மில்லியன் மக்களும் , 5 இலட்சம் வாகனங்களும் பிரவேசிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு நகரினுள் வாகனங்கள் பயணிக்க க்கூடிய வேகம் , மணித்தியாலத்துக்கு 12 கிலோ மீற்றர்களாக குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  இதே நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 2 வருடங்களில் நகரினுள் வாகனங்கள் பயணிக்கக்கூடிய வேகம் , மணித்தியாலத்துக்கு 8 கிலோ மீற்றர்களாக குறையுமென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

பொதுப் போக்குவரத்து வசதியை அபிவிருத்தி செய்வதே என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மாலபேயிலிருந்து , ராஜகிரிய வரையில் தினசரி 174,000 வாகன ங்கள் பயணிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வருட த்தின் முதல் 9 மாதங்களில் 489,000 வாகங்கள் போக்குவரத்தில் இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments