Subscribe Us

header ads

அனுராதபுரம் கொலை: பிரதான சந்தேகநபர் எஸ்.எப் லொகுவைத் தெரியுமா?

அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஹோட்டல் உரிமையாளர் கொலை பெரும் பரபரப்பையும் ,அதன் பின்னரான அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பலர் இதுவரை கைதாகியுள்ளனர்.

இக் கொலை வழக்கில் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் , இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் எனத் தெரிவிக்கப்படும் எஸ்.எப் லொகு என்ற நபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்றார்.

அவர் தற்போது அனுராதபுரத்திலிருந்து தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரது பேஸ்புக் கணக்கில் மேற்படி சம்பவம் தொடர்பிலான எனக் கருதப்படும் நிலைத்தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

அதில் "எங்களுக்கு மற்றும் சமூகத்துக்கு பிழையான செயல்களை செய்தவர்கள் மீண்டும் அவதானமாக இருங்கள் , அனுராதபுரத்தில் பாதாள உலக செயற்பாடுகளை மீண்டும் புதுப்பிப்போம்- Coming Soon - " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments