Subscribe Us

header ads

மாணவர்களின் நடவடிக்கையால் மூடப்பட்ட பாடசாலை

மாணவர் குழுவொன்றின் மோசமான நடத்தை காரணமாக பாடசாலையொன்று மூடப்பட்ட சம்பவம் அம்பலாங்கொடை பலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

அம்பலாங்கொட பலபிடிய ரேவதா பாடசாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

மாணவர் சிலர் பாடசாலையில் தொடர்ச்சியாக குழப்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர். மாணவர்களிடம் பணம் வசூலித்தல் , பாடநடவடிக்கைகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தல், மற்றைய மாணவர்களின் உணவினை பறித்து உண்ணுதல் உட்பட பல அட்டூழியங்களை அவர்கள் புரிந்துள்ளனர்.

அம் மாணவர்கள் குறித்து அதிபரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்கு வருவதை இரண்டு நாட்களுக்கு தவிர்த்துள்ளனர்.

பாடசாலையில் கற்பிக்கும் 60 ஆசிரியர்களும் இவ்வாறு செய்ததால் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் தற்போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments