Subscribe Us

header ads

கள்ளக் தொடர்பு கொலையில் முடிந்த சோகம்: மெதவாச்சியில் சம்பவம்

மெதவாச்சிய , வேவல்கெட்டிய பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலைசெய்து அவரது வீட்டை எரித்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் அப்பெண்ணுடன் கள்ளத்தொடர்பை பேணிவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள மதுபானசாலை யொன்றில்  வைத்து நேற்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட பிரதேசவாசிகள் அங்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

40 வயதான அப்பெண்ணை கொலை செய்தபின் வீட்டுக்கு தீ வைத்த தாக அந்நபர் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டதாகவும் அதன்பின்னரே சந்தேகநபருடன் தொடர்பைப் பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments