Subscribe Us

header ads

எம்.ஜி.ஆர். பாணியில் வாள் சண்டைப் போட்டு, மர்ம நபரை பணிய வைத்த வீர மங்கை

அந்தக்கால எம்.ஜி.ஆர். பாணியில் வாள் சண்டைப் போட்டு, தனது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரை பணிய வைத்துள்ளார் ஒரு வீர மங்கை.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்த கரென் டாலி (43) என்பவர் தனது வீட்டுக்குள் திருட்டுத் தனமாக நுழைய முற்பட்ட மர்ம நபரை, பழங்கால சினிமாவின் எம்.ஜி.ஆர். போல சண்டையிட்டு பணிய வைத்தார்.

தனது இளம் பருவத்தில் வாள் சண்டையைப் பயின்ற கரென், தன்னுடைய படுக்கையில் எப்போதுமே ஒரு ஜப்பானிய வாளை வைத்திருப்பாராம். கடந்த வியாழன் இரவு வீட்டிற்குள் யாரோ நுழைய முற்படுவதை உணர்ந்த அவர், உடனடியாக தனது அலமாரியில் வைத்திருந்த துப்பாக்கியைதான் எடுக்க முயற்சித்தாராம்.

ஆனால், அது கையில் கிடைக்காமல் போனதால் வாளை எடுத்து அந்த மர்ம நபரை வளைத்துப் பிடித்து போலீசாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவல் அளித்தார் கரென்.

அதீத போதையில் இருந்த அந்த நபர் ஜேக்கப் வெஸெல்(30) என இப்பகுதி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். எனினும், அவர் நுழைய முற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

Post a Comment

0 Comments