பாலில்லாத பிளாக் காபி போல கசப்பான பண்டங்களை விரும்பி உண்ணும் மனிதர்கள், மனநோயாளியாவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அதிர்ச்சிதரும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
ஆஸ்திரிய நாட்டின் இன்ஸ்ப்ரக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியை கிறிஸ்டினா சாகியோக்லோவ் தலைமையில் சுமார் ஐநூறு பேரிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இவ்வாறு தெரியவந்துள்ளது.
நானூற்று ஐம்பது ஆண் மற்றும் பெண்களிடம், விருப்பத்திற்கேற்ப பல்வேறு உணவுகளை மதிப்பீடு செய்யுமாறு வினாப்பட்டியல் வழங்கப்பட்டது. இதனை ஆய்வு செய்தபோது, கசப்பு நிறைந்த உணவுப் பண்டங்களை உண்போர் மனநோயின் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் ‘அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண்பவர்கள்’ என்பதும் தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, இவர்கள் அடுத்தவரை பயமுறுத்தி மகிழ்ச்சியடைபவர்களாகவும், தனிப்பட்ட ஆதாயத்தை மட்டுமே முன்னெடுத்து செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர் எனவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

0 Comments