ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது.
ஆனால் மேற்கூரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில் நடைபெற்ற சம்பவம் அரசு மருத்துவமனைகள் செயல்படும் லட்சணத்திற்கு மற்றொரு உதாரணமாக மாறியது. கடந்த ஞாபிற்றுக்கிழமை(அக்-11) மதியம் மும்பையின் பேருந்து நிறுத்ததில் மயங்கிகிடந்த 50 வயது முதியவர் ஒருவர் போலீஸ் உதவியுடன், அருகில் இருந்த சீயோன் மருத்துவமனை என்று அழைக்கப்படும் நகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ரோஹன் அந்த மனிதரின் நாடியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். மேலும் மருத்துவமனை ஆவணங்களிலும் அவர் இறந்துவிட்டதாக தன் கைப்பட எழுதியும் விட்டார்.
இதையடுத்து, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அந்த மனிதரை மருத்துவமனையின் பிணவறைக்கு ஊழியர்கள் எடுத்துச்சென்றனர். அப்போது ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவர் மூச்சுவிடுவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவரை அழைத்துள்ளனர்.
தான் இறந்துவிட்டதாக கூறியவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர், அந்த நபரை உடனடியாக மற்றொரு பிரிவுக்கு மாற்றிவிட்டு, அவர் இறந்துவிட்டதாக எழுதப்பட்டிருந்த ஆவணங்களை கிழித்து எரிந்து தடயங்களை மறைத்தார்.
ஆனால் இந்த விஷயம் சில தினங்களுக்கு முன் வெளிச்சத்திற்கு வந்ததால் தலைமை மருத்துவ அதிகாரி ரோஹகனுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த திகிலான சம்பவத்திற்கு பிறகு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அந்த முதியவர், நேற்று முன் தினம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முந்தைய செய்தியின் இணைப்பு

0 Comments