Subscribe Us

header ads

உலகிலேயே அதிக மதிப்புக்கொண்ட நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம்...

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று, வருமானத்திலும் மாபெரும் வளர்ச்சியை அடைந்த நூறு நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

‘இண்டர்பிராண்ட்’ என்கிற இணையதளம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களே முன்னிலை பெற்றுள்ளன. அத்தனை ஆண்டிராய்டு நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளி, ஆப்பிள் நிறுவனம் இந்த நூறு மதிப்புமிக்க நிறுவனங்களில் உச்சத்தைத் தொட்டுள்ளது.

நூற்றி பன்னிரண்டு பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் பதினோராயிரத்து இருநூறு கோடி) சொத்து மதிப்புள்ள இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஐபோன் 6S மற்றும் ஆப்பிள் வாட்ச் இந்த உயர்வை அடையக் காரணமானதாகக் கருதப்படுகின்றது.

ஆப்பிளைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்தையும், கோகோ கோலா நிறுவனம் மூன்றாம் இடத்தையும் இந்த பட்டியலில் பிடித்துள்ளன.

இந்த நூறு நிறுவனங்களின் பட்டியலில், பதிமூன்று தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மைக்ரோசாப்ட் நான்காம் இடத்தையும், சாம்சங் ஏழாம் இடத்தையும், அமேசான் நிறுவனம் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

எனினும், பேஸ்புக் நிறுவனம் ஜில்லட், ஆரக்கல் போன்ற நிறுவனங்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருபத்து மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

Post a Comment

0 Comments