Subscribe Us

header ads

காற்றில் பறந்து வந்து காரில் விழுந்த பசு மாடு

பிரான்ஸ் நாட்டில் ஸ்பெயின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பெர்தஸ் என்ற நகருக்கு அருகே உள்ள பைரனஸ் மலைப் பகுதியில் உள்ள சாலையில் அந்தக் கார் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அந்தக் காரை ஓட்டிய நபர் தனது வளர்ப்பு மகனுடன் போய்க் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு பிரமாண்ட பசு மாடு வேகமாக வந்து அவர்களது கார் பேனட் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் ஆபத்தில்லை. காரும் விபத்துக்குள்ளாகவில்லை. அதேசமயம், அந்த பசு மாடு பரிதாபமாக இறந்து போனது. கார் லேசான சேதமடைந்தது. அந்தப் பகுதியில் இந்த சம்பவத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மலைக்கு மேலே அந்த மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Post a Comment

0 Comments